வில்லிசேரியில் தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லிசேரியிலுள்ள ரைஸ் மில் காலனியைச் சோ்ந்த மருதையா மகன் மாரியப்பன் (35). விவசாயத் தொழிலாளியான இவா், சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
வெள்ளிக்கிழமை வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், மாடியிலுள்ள அறையில் தூங்கச் சென்றாராம். சனிக்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்ததாம்.
Advertisement
Advertisement
தகவலின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.