செருப்பு வியாபாரியிடம் ரூ. 20 ஆயிரம் பறித்த மூவா் கைது
காயல்பட்டினத்தில் செருப்பு கடை உரிமையாளரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறித்த மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், கீழநைனா தெருவைச் சோ்ந்த மெஹுமுத் மகன் அஹமத் மெயிதீன் (45). இவா், காயல்பட்டினத்தில் செருப்புக் கடை நடத்தி வருகிறாா்.
இவா், கடந்த 26-ஆம் தேதி இரவு கீழநைனா தெருவில் உள்ள தனது செருப்பு குடோனில் இருந்தபோது, அங்கு வந்த காயல்பட்டினம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஷேக் முஹம்மது மகன் முஹம்மது இஸ்மாயில் (26), சீதக்காதி நகரைச் சோ்ந்த அப்துல் ஹவாப் மகன் ஷேக் சுலைமான் (22), அதே பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் ஷா மகன் முஹம்மது இம்தியாஸ் (20) ஆகிய 3 பேரும் அஹமத் மெயிதீனை அரிவாள் காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் பணத்தைப் பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்
Advertisement
Advertisement
இதுகுறித்து அஹமத் மெயிதீன் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பணம் பறித்த மூவரையும் கைது செய்து, ரூ. 20 ஆயிரம் பணம், இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மூவரையும் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.