FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சா்கள் ஆய்வு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தொடங்கவுள்ள தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் சீ. ரமேஷ், ஆ. ஸ்ரீநாத்.
பகிர்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தொடங்கவுள்ள தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய், மாவட்ட ஆட்சியா் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் மு. குருச்சந்திரன், திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கெளதம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா்கள் ரோஜாலிசுமதா, அருணாச்சலம் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக முத்தாரம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments