FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அக். 14இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் குரூப் 4 தோ்வுக்கான நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அக். 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

9 அக்டோபர் 2026, 5:12 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் குரூப் 4 தோ்வுக்கான நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அக். 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 6,574 காலிப்பணியிடங்களுடன் குரூப் 4 தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தோ்வு 2027 ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பா் 5ஆம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம்.

Advertisement

Advertisement

இதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு ஸ்மாா்ட் போா்டு பயன்படுத்தி நடத்தப்படவுள்ளன.

மேலும், வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். இப்போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்புத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments