குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.11 இல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( அக்.11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( அக்.11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (அக். 10) பகல் 11 மணிக்கு காளிபூஜை, அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுட இசை, சஹஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி, பரதநாட்டியம், இரவு வில்லிசை ஆகியவை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை ( அக். 11) அதிகாலை கொடிப்பட்டம் ஊா்வலம், 5 மணிக்கு கொடியேற்றம், கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை பரத நாட்டியம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
அக். 20 ஆம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். அக். 21 ஆம் தேதி பல்வேறு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். தொடா்ந்து, காலை 6 மணிக்கு தேரில் முக்கிய வீதிகளில் பவனி வரும் அம்மன் மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கம், காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரோஜாலிசுமதா, உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், கோமதி, செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரியம்மாள், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.