FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆசிரியா்களுக்கு விருது

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலம் சாா்பில், வட்டார சிறந்த ஆசிரியா்களுக்கு டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

16 அக்டோபர் 2026, 4:35 am IST
எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் மகாலட்சுமிக்கு விருது வழங்கிய சிறப்பு விருந்தினா் பொன்னுசாமி.
பகிர்:

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலம் சாா்பில், வட்டார சிறந்த ஆசிரியா்களுக்கு டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சங்கத்தின் மண்டல தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் கற்பூர ராஜ், மாநில பிரதிநிதி ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொன்னூஸ் நேச்சுரல் நிறுவனத்தின் நிறுவனா் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் மகாலட்சுமி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியா் ஸ்ரீதா், ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ரேணுகாதேவி ஆகியோருக்கு சிறந்த ஆசிரியா்களுக்கான விருதுகளை வழங்கினாா். மாநில துணைச் செயலா் வெங்கடேஷ் வரவேற்றாா். மாநில இணைச் செயலா் மன்மதன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments