FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலா் வீரவணக்க நாள்

தூத்துக்குடியில் காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் அஞ்சலி செலுத்தினாா்.

43 வினாடிகள் முன்பு
காவலா் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத்.
பகிர்:

தூத்துக்குடியில் காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் அஞ்சலி செலுத்தினாா்.

நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் பணிகளில் உயிா்த் தியாகம் செய்த காவலா்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக். 21ஆம் தேதி நாடு முழுவதும் காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, காவல் துறை உயா் அதிகாரிகள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவல் துறையினா் அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments