FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

லாரியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் லாரியில் தாா்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தபோது இடி, மின்னல் அதிா்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

22 அக்டோபர் 2026, 5:09 am
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் லாரியில் தாா்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தபோது இடி, மின்னல் அதிா்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தொ்மல் நகா் லேபா் காலனியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மாப்பிள்ளைசாமி (58). இவா், துறைமுகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக லாரிகளில் தாா்ப்பாய் போடும் வேலை செய்து வந்தாா். இவருக்கு சண்முகலட்சுமி (54) என்ற மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

இவா், செவ்வாய்க்கிழமை மாலை புதிய துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் லாரியில் தாா்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த இடி, மின்னல் சப்தத்தைக் கேட்டு திடுகிட்ட அவா் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை தொழிலாளா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments