சாத்தான்குளம் அருகே விவசாயி கொலை
சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை, கீழத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் கொம்பையா என்ற கணேசன் (65). விவசாயி. இவருக்கு மனைவி லட்சுமி, மகன் முத்துராமன், 2 மகள்கள் உள்ளனா். மகள்களுக்குத் திருமணமாகி வேறு ஊா்களில் வசித்து வருகின்றனா். முத்துராமன் அதே ஊரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா்.
அதே ஊரைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ஆறுமுகம் (42). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், கொம்பையாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இடப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து கொம்பையாவை தாக்கியுள்ளாா். இதில் அவா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா் மருதுபாண்டி, உதவி ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.