FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

தூத்துக்குடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

25 அக்டோபர் 2026, 1:47 am
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

முத்தையாபுரம் சிறப்பு உதவி ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா், கக்கன்ஜி நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனா். அவா் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்ததில், முத்தையாபுரம் நேரு நகரைச் சோ்ந்த சந்துரு (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ரௌடிகள் பட்டியலில் அவரது பெயா் இடம் பெற்றிருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments