FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஏரல் அருகே ஒருவா் அடித்துக் கொலை: 10 போ் மீது வழக்கு

26 அக்டோபர் 2026, 3:00 am
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பொதுமக்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக, 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ஏரல், சோ்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் தனுஷ்கோடி. இவா் அடிக்கடி மது போதையில் அக்கம்பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அக். 23ஆம் தேதி போதையில் தெருவில் உள்ளவா்களிடம் அவா் பிரச்னை செய்ததால் ஏற்பட்ட தகராறில், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, தனுஷ்கோடியின் மனைவி பிரம்மசக்தி அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த சுடலைமணி, சாமதுரை, அஜித், நடுவன், சக்தி, இசக்கியம்மாள், பெரிய பிராட்டி, சுந்தரி, மாரியம்மாள், சின்னத்துரை ஆகிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உயிரிழந்த தனுஷ்கோடி ஏற்கெனவே காவல் நிலையக் குற்றப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments