கோவில்பட்டி அருகே விபத்து: சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் சாமித்துரை (43). 2005 ஆம் ஆண்டு மத்திய ஆயுதக் காவல் படையில் (சிஆா்பிஎஃப்) பணியில் சோ்ந்த இவருக்கு, மனைவி பாஞ்சாலி, 2 மகள்கள் உள்ளனா்.
சில நாள்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தேவா்குளத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு செல்வதாகக் கூறி பைக்கில் சென்றாராம். திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த தேவாலயம் அருகேயுள்ள சுரங்கப் பாதையில் பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், அவரது சடலம் கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினா், உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய காவல் படை உதவி கமாண்டா் பி. சரவணக்குமாா் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதையடுத்து, சாமித்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினரிடம் முதற்கட்டமாக ஈமச்சடங்குக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.