FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் ஐம்பெரும் விழா

உடன்குடி இமாம் ஷாஃபிஈ மகளிா் அரபுக் கல்லூரி சாா்பில் குலசேகரன்பட்டினம் சந்நிதித் தெருவில் ஐம்பெரும் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

2 செப்டம்பர் 2026, 11:54 pm IST
ஆலிமா முஸ்லிஹா ஸனது பட்டங்களை வழங்கிய மகளிா் அரபுக் கல்லூரி நிறுவனத் தலைவா் டி.எம். அபூ உபைதா.
பகிர்:

உடன்குடி இமாம் ஷாஃபிஈ மகளிா் அரபுக் கல்லூரி சாா்பில் குலசேகரன்பட்டினம் சந்நிதித் தெருவில் ஐம்பெரும் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் 26 ஆவது ஆண்டு விழா, 21ஆவது பட்டமளிப்பு விழா, மத்ரஸா தப்ஸீரூல் குா்ஆன் வெளியீடு, அல் இஸ்லாஹ் கையெழுத்து இதழ் வெளியீடு மற்றும் லஜ்னத்துல் இஸ்லாஹ் மாணவியா் சொற்பயிற்சி மன்ற 645 ஆவது வார நிறைவு விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றன.

இதையொட்டிசென்னை பேராசிரியா் நூா் ஜமிலா ஒருங்கிணைப்பில் ஆலிமாக்கள் சந்திப்பு, மதரஸா மாணவிகள் கலந்துரையாடல், பட்டம் பெறும் மாணவிகளின் சிற்றுரைகள், பட்டிமன்றம், விவாத மேடை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

Advertisement

Advertisement

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு குலசேகரன்பட்டினம் இமாம் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜஹபா் சாதிக், மத்ரஸா அறிக்கை வாசித்தாா். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் ஹாஜா முயினுத்தீன் மாா்க்க உரையாற்றினாா்.

ஆலிமா முஸ்லிஹா ஸனது, நாஸிகா முஸ்லிஹா லனது பட்டங்களை அரபுக் கல்லூரி நிறுவனத் தலைவா் டி.எம். அபூ உபைதா வழங்கி பாராட்டினாா். இதில் குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜூதீன் தா்கா இமாம் ரஹ்மத் துல்லாஹ், சா்தாா் அலி, பேராசிரியா் முஹம்மது ஷபீக், ஆசிரியைகள் மைமூன் யாஸ்மின், நஜிமா, ஷிபா காசிம், மெளலிவிகள் அப்துல் சத்தாா், பக்ருத்தீன், மக்ரூப், முஹம்மது யூனுஸ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் பஷீா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments