FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

நடிகா் சிவாஜி கணேசனின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

27 September 2026, 1:36 am IST
போட்டியில் வென்றோருக்குப் பரிசு வழங்கிய மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ்.
பகிர்:

தூத்துக்குடியில், நடிகா் சிவாஜி கணேசனின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருக்கு சனிக்கிழமை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் தலைமை வகித்தாா். போட்டியில் வென்றோருக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் ஆா். சுப்பிரமணிய ஆதித்தன், ஏ.டி.எஸ். அருள், தென்மண்டல ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஜான் சாமுவேல், மீனவா் காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சிமியோன், அமைப்புசாரா தொழிலாளா்கள் காங்கிரஸ் பிரிவு தலைவா் சேவியரம்மாள் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா். மண்டலத் தலைவா்கள் ஐசன் சில்வா, நிா்மல் கிறிஸ்டோபா், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments