மாநில பளுதூக்கும் போட்டி: புனித ஜோசப் பள்ளி மாணவா் முதலிடம்
வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்திய பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா் மகேந்திரன் முதலிடம் பெற்றாா்.

17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் 98 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அவா், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றாா். அந்த மாணவரை பள்ளித் தாளாளா் எஸ். எம். அருள்ராஜ், உதவி பங்குத்தந்தை குழந்தை ராஜ், பள்ளி தலைமை ஆசிரியை அலெக்ஸ் ஷான், உடற்கல்வி ஆசிரியா் ஆரோக்கிய முத்துராஜ் ஆகியோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.