சைக்கிள் திருடியவர் கைது
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ராமசாமி (85). இவர் சனிக்கிழமை மதியம் உடையார்பாளையம் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு கடை முன் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்கச் சென்றாராம்.

அப்போது, உடையார்பாளையம் வேலாயுதம் மகன் குருநாதன் (32) என்பவர் சைக்கிளைத் திருடிக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதைக் கண்ட பொதுமக்கள் அவரைக் கையும்களவுமாகப் பிடித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிந்து குருநாதனை கைது செய்து விசாரிக்கின்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.