கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
அரியலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் வாலாஜநகரம் நடுத்தெருவைத் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ரீஜினாவதி (25). இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட அருள் கடந்த பிப். 27-ம் தேதி உயிரிழந்தார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த ரீஜினாவதி வியாழக்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். உறவினர்கள் அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.