கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளான மக்கள் தரிசனம்
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன், இலைக்கடம்பூர் முனியனார்
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன், இலைக்கடம்பூர் முனியனார், லிங்கத்தடி மேட்டிலுள்ள ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவரர் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.26) விக்னேஷ்வர பூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், கோபூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து, நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான செம்மலையப்பா, பூமாலையப்பர், பச்சையம்மன், கருப்புசாமி, விநாயகர், முருகன், கொப்பாட்டியம்மன் உள்ளிட்ட கோயில் கலசங்களில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.