சொத்துத் தகராறு: இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார். தாக்கியவரைப் போலீஸார் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ராதா (40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியனுக்கும் (45) சொத்துப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் ராதாவைப் பாண்டியன் தாக்கியுள்ளார்.
இதில், காயமடைந்த ராதா அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து பாண்டியனைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.