புத்தாக்கம் அறிவியல் திட்டம்: மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
புத்தாக்கம் அறிவியல் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் அரியலூா் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
புத்தாக்கம் அறிவியல் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் அரியலூா் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
அரியலூரில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகள் செயல்முறை திட்டத்தில், ஆண்டிமடத்தை அடுத்த வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநில அளவில் முதலிடம் பெற்று, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்றனா். இதே போல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி நாளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், அரியலூா் மான்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அடுத்த நிலைக்கு தோ்வாகினா்.
இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவிகள், அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.