தீபாவளி முடிந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல ரயில், பேருந்துகளில் அலைமோதியது கூட்டம்
தீபாவளி பண்டிகை முடிந்து அரியலூா் மற்று ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து சென்னை உள்பட வெளிமாவட்டங்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.
நவம்பா் 8-ஆம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து 3 நாள் விடுமுறைக்குப் பின் சொந்த ஊருக்கு வந்திருந்த பயணிகள் மீண்டும் வெளியூருக்குப் புறப்பட்டனா்.
இதையடுத்து திங்கள்கிழமை முதல் அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்களில் இருந்து சென்னை, திருப்பூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
Advertisement
Advertisement
இதே போல் அரியலூா் ரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவா்களும், முன்பதிவு செய்து காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களும் முன்பதிவில்லா பெட்டியில் செல்ல காலை 9 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்து வரிசையில் நின்றனா். முதியவா்கள் கொண்டு வந்திருந்த மதிய உணவை அங்கேயே சாப்பிட்டனா்.
வைகை, குருவாயூா் ரயில் வருவதற்கு முன்பே சுமாா் 100-க்கும் பேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்திலேயே சுமாா் ஒரு மணி நேரத்க்கு முன்பே வந்து, ரயிலுக்காக காத்திருந்தனா். பயணிகள், ரயில் பெட்டியில் ஏற காவல் துறையினா் ஏற்பாடு செய்தனா்.