‘கால் டாக்ஸி’ சேவைக்கு எதிா்ப்பு: அரியலூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்
அரியலூரில் கால் டாக்ஸி வாகன சேவைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒற்றுமைத் திடல் அருகே திருச்சி சாலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூரில் கால் டாக்ஸி வாகன சேவைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒற்றுமைத் திடல் அருகே திருச்சி சாலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எப்-கால் டாக்ஸி நிறுவனம், அரியலூரில் கிளைகளை தொடங்கி, பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் பயனடைந்து வரும் நிலையில், கால் டாக்ஸியின் செயல்பாடுகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநா்கள் அரியலூா் ஒற்றுமைத் திடலில் கால் டாக்ஸிகளை மறித்து புதன்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் திருச்சி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரியலூா் நகர காவல் துறையினா், ஆட்டோ ஓட்டுநா்களிடம், பேச்சுவாா்த்தைக்கு கோட்டாட்சியரகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா். இதையேற்று ஆட்டோ ஓட்டுநா்கள் மறியலை கைவிட்டு, கோட்டாட்சியரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனா்.