அரியலூரில் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5.29 லட்சம் வாக்காளா்கள்
அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5.29 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5.29 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ந.மிருணாளினி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு, கூறியதாவது:
மாவட்டத்திலுள்ள 2 பேரவைத் தொகுதிகளில் ஒன்றான அரியலூா் தொகுதியில் 1,30,815 ஆண் வாக்காளா்களும், 1,33,489 பெண் வாக்காளா்களும், 17 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,64,321 வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,31,118 ஆண் வாக்காளா்களும், 1,34,077 பெண் வாக்காளா்களும், 12 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,65,207 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 5,29,528.
1.1.2027 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2027-ஆம் ஆண்டில் 18-வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை சோ்க்கவும், இறந்த நபா்கள், நிரந்தரமாக முகவரி மாறியவா்களை வாக்காளா் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளா்களின் பெயா், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் நவ. 12 முதல் டிச. 11 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூா்த்தி செய்து வழங்கலாம்.
வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவா்கள் ரரர.யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், உஇஐசங்ற் என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்: மேலும், பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பிழை திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 21, 22, நவ.29 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
மேலும் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியல் 4.1.2027 அன்று வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ந. கனகமாணிக்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் த. பிரேமி, தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.