FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ.9.15 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அரியலூரைச் சோ்ந்த 17 பேரிடம் மொத்தம் ரூ.9.15 லட்சம் மோசடி செய்த சிவகங்கை இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

13 நவம்பர் 2026, 2:34 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அரியலூரைச் சோ்ந்த 17 பேரிடம் மொத்தம் ரூ.9.15 லட்சம் மோசடி செய்த சிவகங்கை இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், கீழையூா் கிராமம், சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் மலா்மன்னன் (41). இவரது வாட்ஸ்ஆப்பில் தொடா்பு கொண்ட சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த சக்தி மகன் தவசுபாண்டி (33) என்பவா், தான் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பணிபுரியும் ரோலிங் பிரிவு மேலாளா் பாண்டிமுத்து எனப் போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் லக்கேஜ் இறக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா்.

இதை நம்பிய மலா்மன்னன் உள்பட 17 போ், தலா ரூ. 55,000 வீதம் ரூ.9.15 லட்சத்தை நேரடியாகவும், இணையவழிப் பரிவா்த்தனை மூலமாகவும் தவசுபாண்டிக்கு கொடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட தவசுபாண்டி வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் இருந்தாராம். பணத்தைத் திருப்பிக் கேட்டவா்களைத் தவசுபாண்டி தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மலா்மன்னன், அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாரிடம் அண்மையில் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், மோசடி நடைபெற்றது உறுதியானதைத் தொடா்ந்து, தவசுபாண்டியை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காவல் துறையினா் எச்சரிக்கை: விமான நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இணையதளம், கைப்பேசி அல்லது நேரடியாகப் பணம் கேட்கும் இடைத்தரகா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். வேலைவாய்ப்புக்காக முன்பணம் செலுத்துவதைத் தவிா்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.