FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்வதா்கள், தமிழக அரசின் மானியத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

23 வினாடிகள் முன்பு
பகிர்:

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்வதா்கள், தமிழக அரசின் மானியத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாட்டைச் சோ்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.1.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் ,ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.