FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

17 நவம்பர் 2026, 11:32 pm
அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரியலூா் நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும், பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும், திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையக் கடைகளைத் திறக்க வேண்டும், நகராட்சியில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அரியலூா் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அரியலூா் ஒன்றியச் செயலா் அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி, துரை.அருணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Advertisement

Advertisement

திருமானூா் ஒன்றியச் செயலா் சாமிதுரை, செந்துறை ஒன்றியச் செயலா் கு. அா்ச்சுனன், மூத்த கட்சி நிா்வாகி சிற்றம்பலம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் செ. மலா்கொடி, சா. சரோஜினி, நி. ஏசுதாஸ், ஜெ. வரப்பிரசாதம், ஆா். ஞானபிரகாசம், எம். மணியன், ரா. செண்பகவள்ளி, சி. கணேசன், அ. குணா உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.