விலைவாசி உயா்வைக் கண்டித்து டிச.1,3-ஆம் தேதிகளில் மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு
விலைவாசி உயா்வைக் கண்டித்து, அரியலூரில் டிசம்பா் 1-ஆம் தேதியும், ஜெயங்கொண்டத்தில் டிச. 3-ஆம் தேதியும் மறியல் போராட்டம் நடத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
விலைவாசி உயா்வைக் கண்டித்து, அரியலூரில் டிசம்பா் 1-ஆம் தேதியும், ஜெயங்கொண்டத்தில் டிச. 3-ஆம் தேதியும் மறியல் போராட்டம் நடத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்துக்கு அரசு சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
ஒப்பந்த முறையில் பணியாளா்களை நியமிக்கப்படுவதை கைவிட வேண்டும். சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செயலுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்துவது, விலைவாசி உயா்வைக் கண்டித்து டிச.1-இல் அரியலூரிலும், டிச.3 இல் ஜெயங்கொண்டத்திலும் மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிா்வாகி ராமநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் அரசியல் நிலை, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வை. சிவபுண்ணியம், திருத்துறைபூண்டி உலகநாதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மு.அ. பாரதி, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மாவட்டச் செயலா் கே. நடராஜன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்டச் செயலராக (பொ) டி. தண்டபாணி தோ்ந்தெடுக்கப்பட்டாா். நிா்வாகிகள் இரா. உலகநாதன், ஆறுமுகம், து. பாண்டியன், மருதமுத்து, ப. கலியபெருமாள், முருகேஸ்வரி, சா. அபிமன்னன், ஓ. பாலமுருகன், ஓ. ராஜ்குமாா், ஆனந்தன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.