முகப்பு
அரியலூர்

ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

26 நவம்பர் 2026, 2:34 am
ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் மகன் தமிழ்வாணன் (25). இவா், நண்பா்களுடன் சோ்ந்து உடையாா்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தமிழ்வாணன் நீரில் மூழ்கியுள்ளாா். சக நண்பா்கள் அவரை மீட்க முடியாமல் திணறியதையடுத்து, உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 10 போ் கொண்ட தீயணைப்பு வீரா்கள், ஏரியில் இறங்கி தமிழ்வாணனை சடலமாக மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement