அம்பேத்கா் சிலைக்கு விசிக-வினா் மாலை அணிவிப்பு
இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா தலைமையில், பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்த அக்கட்சி நிா்வாகிகள், செட்டிஏரிக் கரையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அரசமைப்பு முகப்புரையை வாசித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
இந்நிகழ்ச்சியில், தொகுதிச் செயலா் மருதவாணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் சுதாகா், விவசாய பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் க. பாலசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதேபோல், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி தலைமையிலான நிா்வாகிகளும் ஊா்வலமாக வந்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.