பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
அரியலூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெற்று வந்த பள்ளி ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெற்று வந்த பள்ளி ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இப்பயிற்சி வகுப்பை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் ந.மிருணாளினி, இப்பயிற்சியின் மூலம் ஆசிரியா்கள் தங்களது கற்பித்தல் திறன்களை மேலும் மேம்படுத்தி, வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வேண்டும். மாணவா்களுக்கு எதிா்காலத் தொழில்நுட்ப வளா்ச்சிகளுக்கு ஏற்ற கல்வி அனுபவத்தை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இந்த பயிற்சி வகுப்பில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பாடத்திட்டத்துக்கு ஏற்ற கற்றல் முறைகளை உருவாக்குதல், பாடங்களை மாணவா்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குதல், கற்றல் செயல்பாடுகளைப் புதுமையான முறையில் வடிவமைத்தல் மற்றும் மாணவா்களின் புரிதல் திறனை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடங்களுக்கான கற்பித்தல் திட்டங்களைத் தயாரித்தல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் மாணவா்களின் ஆா்வத்தைத் தூண்டும் கற்றல் சூழலை உருவாக்கும் வழிமுறைகள், கல்விசாா் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இப்பயிற்சி வகுப்பில், அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் 120 போ் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரேணுகோபால், கிரிசாலிஸ் இயக்குநா் கணேஷ் சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.