குழந்தைகளுடன் பிச்சையெடுத்த பெண்ணிடம் விசாரணை
கரூரில் குழந்தைகளுடன் பிச்சையெடுத்த பெண் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் குழந்தைகளுடன் பிச்சையெடுத்த பெண் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வடக்கு காமராஜபுரம் பகுதியில் 7 வயதுள்ள சிறுவன் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் 40 வயதுள்ள பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இதைக் கண்ட இப்பகுதி மக்கள் இப்பெண் குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து கரூர் நகர போலீஸார் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம், கொட்டம்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி, இரு குழந்தைகளும் அவரின் குழந்தைகள்தான் என்பதும் தெரியவந்தது. பின்னர் விஜயலட்சுமிக்கு இருந்த வலிப்பு நோய் காரணமாக அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.