பயணிகளை ஏற்றி வந்த சுற்றுலா பேருந்து பறிமுதல்
சுற்றுலா பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பேருந்து கரூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சுற்றுலா பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பேருந்து கரூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பேருந்து மதுரை செல்ல கரூருக்கு சனிக்கிழமை காலை வந்தது. அப்போது கரூரில் பயணிகளை ஏற்றிக்கொண்டே இருந்ததால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பேருந்து ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜ் அவர்களிடம் விசாரணை செய்தார். இதில் பேருந்தின் லைசென்ஸை வாங்கிப் பார்த்தபோது அது, ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல பெற்ற உரிமம் எனத் தெரிய வந்தது. மேலும், பேருந்து ஓட்டுநர் சென்னையில் இருந்து சுற்றுலா பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு செல்ல இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பேருந்தை பறிமுதல் செய்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.