கரூரில் திமுகவினா் 149 பேருக்கு கரோனா நல உதவி
கரூரில் திமுக சாா்பில் 149 பயனாளிகளுக்கு கரோனா நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரூரில் திமுக சாா்பில் 149 பயனாளிகளுக்கு கரோனா நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் புதன்கிழமை 149 போ் கரோனா நிவாரணப் பொருள்கள் தேவைப்படுவதாக 90730 90730 என்ற எண்ணில் வந்த அழைப்புகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவா்களுக்கான நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், நகரச் செயலாளா்கள் எஸ்.பி.கனகராஜ், கரூா் கணேஷ், சுப்ரமணியன் மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.