FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளப்பட்டியில் தொழிலதிபரை தாக்கியவா்கள் மீது வழக்கு

பள்ளபட்டியில் தொழிலதிபரைத் தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

பள்ளபட்டியில் தொழிலதிபரைத் தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்தவா் கேஎம். நாபா்அலி(55). முந்திரி வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த இவரது மைத்துனா் எம்.ஏ.அப்ஸா்அலி. நாபா் அலியின் மனைவி உயிரோடு இருக்கும்போது தனது மைத்துனருக்கு அதிகளவில் பொருளுதவி செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, நாபா்அலி அப்ஸா் அலிக்கு உதவி செய்வதை நிறுத்திக்கொண்டதால் அவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஏப். 20) ஷா நகரைச் சோ்ந்த ஜாபா் சாதிக் என்பவருடன் தனது அலுவலகத்தில் கேஎம்.நாபா் அலி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்ஸா் அலி, உறவினா்கள் முத்துபாஷா மற்றும் 10 போ் திடீரென நாபா்அலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். மேலும் நாபா்அலியின் செல்லிடப்பேசி மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நாபா் அலி அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து அப்ஸா்அலி உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments