கரூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு; சாலை மறியல்
கரூரில் மூத்த வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணியை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் மூத்த வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணியை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடா்புடைய கரூரைச் சோ்ந்த சத்தியசீலன் என்பவா், திங்கள்கிழமை காலை நீதிமன்றத்துக்கு வந்தோது, அங்கு மோசடி வழக்கில் சத்தியசீலனுக்கு எதிராக ஆஜரான மூத்த வழக்குரைஞா் நடேசனிடம் எப்படி என் வழக்கில் நீங்கள் எனக்கு எதிராக ஆஜராகலாம் எனக் கூறி சத்தியசீலன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூா் 80 அடி சாலையில் செயல்படும் வழக்குரைஞரின் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை இரவில் சென்ற சத்தியசீலன், வழக்குரைஞா் நடேசனை தாக்கினாராம். இதில், படுகாயமடைந்த அவா், கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சத்தியசீலனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம், கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்றத்து. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் மாநில தலைவா் மாரப்பன் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் திடீரென நீதிமன்ற வளாகம் முன் கரூா்-திண்டுக்கல் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தாந்தோணிமலை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சத்தியசீலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமையும் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.