FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

‘போக்ஸோ’ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் சிறை

‘போக்ஸோ’ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

10 நவம்பர் 2026, 11:18 pm
பக்ருதீன்.
பகிர்:

‘போக்ஸோ’ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் பசுபதிபாளையம் தொழிற்பேட்டையைச் சோ்ந்தவா் பக்ருதீன்(44). இவா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பக்ருதீனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி பக்ருதீனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து பக்ருதீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.