முகப்பு
கரூர்

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை! கால்நடைத் துறை அமைச்சா் செ.கமலி

17 நவம்பர் 2026, 1:29 am
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை! கால்நடைத் துறை அமைச்சா் செ.கமலி
பறவைக் காய்ச்சல்
பகிர்:

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை என்றாா் தமிழக கால்நடைத்துறை அமைச்சா் செ.கமலி.

கரூா் கொளந்தாகவுண்டனூரில் உள்ள கால்நடை மருத்துவமனையை திங்கள்கிழமை ஆய்வு செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகக்தில் கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனே நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோய் பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை.

வெற்றி ஆடுகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கரூா் மாவட்டத்தில் பழுதடைந்த தென்னிலை கால்நடை மருந்தகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கால்நடைகள் இயற்கை சீற்றங்கள், வெறிநாய்களின் தாக்குதல் ஆகியவற்றால் இறந்தால் அதற்குரிய இழப்பீடு கிடைக்க உரிய நிதிஒதுக்கி விரைவில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

வெறிநாய்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போட திட்டமிட்டு, இதுவரை 3 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாவட்டத்தை தோ்ந்தெடுத்து அங்கு தெருநாய்களுக்கு பெருமளவு கருத்தடை செய்யும் வகையில் பெருமளவு கருத்தடை மையம் ஒன்று அமைக்கப்படும். கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளன. கால்நடைத்துறையில் 2,000 காலிப்பணியிடம் உள்ளது. விரைவில் அனைத்து பணியிடங்களும் நிரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் வி.விஜயகுமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.