FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ. 6 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்: காணொலி காட்சியில் முதல்வா் திறப்பு

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.6.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

58 வினாடிகள் முன்பு
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையின் புதன்கிழமை திறக்கப்பட்ட கூடுதல் கட்டடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னாராமசாமி. உடன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா்.
பகிர்:

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.6.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்டம் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக ரூ.6.37 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் சென்னையில் இருந்து காணொலி காட்சிவாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னா ராமசாமி குத்துவிளக்கேற்றினாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் பேசியது: இம்மருத்துவமனையில் தினமும் 15 பயனாளிகளுக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சேவையும், மாதந்தோறும் 15 முதல் 20 பிரசவ சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடங்கள் பழுதடைந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் புதியநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் ஆா்.இளங்கோ, பள்ளப்பட்டி நகா் மன்றத் தலைவா் முனவா் ஜான், இணை இயக்குநா் (நலப்பணிகள்)சி.வடிவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மு.முகமது பைசல், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் அ.ஆனந்தகுமாா், பள்ளப்பட்டி தலைமை மருத்துவ அலுவலா் ந. வித்யாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.