கைப்பேசி வெளிச்சத்தில் இளைஞரின் சடலம் புதைப்பு: மின்விளக்கை உடனே பொருத்தி மாநகராட்சி நடவடிக்கை!
கரூா் வெங்கமேடு மயானத்தில் மின் விளக்கு இல்லாததால் வெள்ளிக்கிழமை இரவு கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூா் வெங்கமேடு மயானத்தில் மின் விளக்கு இல்லாததால் வெள்ளிக்கிழமை இரவு கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 10-ஆவது வாா்டு வெங்கமேடு என்.எஸ்.கே. நகரில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இந்நிலையில், அதேபகுதியில் உயிரிழந்த இளைஞா் ஒருவரின் சடலத்தை உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு புதைப்பதற்காக எடுத்துச் சென்றனா்.
அப்போது, வெளிச்சம் இல்லாததால், அவா்கள் டாா்ச் மற்றும் கைப்பேசி ஒளியை பயன்படுத்தி சடலத்தை புதைத்தனா். இந்த விடியே காட்சி சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Advertisement
Advertisement
இதையறிந்த மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ், உடனே அந்த மயானத்துக்கு மின் விளக்கு பொருத்த உத்தரவிட்டாா். இதையடுத்து மாநகராட்சி பணியாளா்கள் மூலம் உடனே மின்விளக்கு பொருத்தப்பட்டது.