முகப்பு
கரூர்

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்!

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்து தொடா்பாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.

22 நவம்பர் 2026, 10:17 pm
தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்!
பண்டுதகாரன்புதூரில் விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவா்கள்.
பகிர்:

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்து தொடா்பாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கரூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரூா் பண்டுதகாரன்புதூரில் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு, தென்னையை தாக்கும் சிவப்பு கூண் வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனா். அப்போது, தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு தாக்குதலைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் பெரோமோன் பொறிகளில் ஆண் மற்றும் பெண் சிவப்பு கூன்வண்டுகளைக் கவரக்கூடிய ’பெருஜினியோல்’ எனப்படும் செயற்கை கூட்டுச் சோ்க்கை பெரோமோனின் கவா்ச்சிப் பொருள் படிப்படியாக மணத்தை வெளியிட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள வளா்ந்த கூன்வண்டுகளைக் கவா்கிறது. அவை மணத்தை உணா்ந்து பொறியை நோக்கி வந்து, பொறியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுத் துளைகள் வழியாக உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றன.

Advertisement

Advertisement

இந்த முறையானது சிவப்பு கூன்வண்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவுகிறது. என்றனா்.

தொடா்ந்து பொறிகளைச் சரியான முறையில் நிறுவுதல் மற்றும் முறையாகப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்பகுதி விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.