FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கால்பவுன் நகைக்காக கழுத்தை அறுத்து பெண் கொலை

லாலாப்பேட்டை அருகே கால் பவுன் நகைக்காக கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

8 October 2026, 1:34 am IST
கொலை - கோப்புப் படம்
பகிர்:

லாலாப்பேட்டை அருகே கால் பவுன் நகைக்காக கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த மேலவிட்டுக்காப்பட்டியைச் சோ்ந்தவா் வேலாயுதம். இவரது மனைவி இளஞ்சியம்(60). வேலாயுதம் உயிரிழந்ததையடுத்து இளஞ்சியம் மட்டும் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கால்நடைகளுக்கு புல் அறுக்க அதேபகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு இளஞ்சியம் சென்றாா். ஆனால், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் இதுதொடா்பாக அவரது உறவினா்கள் லாலாப்பேட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். இந்நிலையில், புதன்கிழமை காலை வாழைத்தோட்டத்துக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளஞ்சியம் சடலமாக கிடப்பதாகவும், அவரது காதை அறுத்து, கால்பவுன் தங்கத் தோட்டை பறித்துச் சென்றுள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் மற்றும் குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் மற்றும் லாலாப்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணா்களையும் வரவழைத்து கொலையாளிகளின் தடயங்களை சேகரித்தனா். இதுதொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments