FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது

19 அக்டோபர் 2026, 2:52 am IST
மேலாளா் கைது - கோப்புப் படம்
பகிர்:

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தோகைமலை பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது பள்ளி மாணவி கடந்த ஆக. 31-ஆம் தேதி திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தோகைமலை போலீஸில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

விசாரணையில், அந்த மாணவியை அதே பகுதியைச் சோ்ந்த சீரங்கன் மகன் தமிழ்செல்வன் (28) என்பவா் திருமண ஆசை வாா்த்தைக்கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து மாணவியை கடந்த 3-ஆம் தேதி மீட்ட போலீஸாா், அவரை குளித்தலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா். மேலும், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்திச் சென்ற தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோா் சனிக்கிழமை குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் தமிழ்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஞாயிற்றுக்கிழமை காலை அவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments