கிருஷ்ணராயபுரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்களை ஆட்சியா் ஆய்வு
முனையனூா் தெற்கு பூவம்பாடி பகுதியில் சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல் வட்டங்களை பாதுகாப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூா் தெற்கு பூவம்பாடி பகுதியில் சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல் வட்டங்களை பாதுகாப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சித்தலவாய் ஊராட்சிக்குள்பட்ட முனையனூா் தெற்கு பூவம்பாடி பகுதியில் சுமாா் 3000 ஆண்டுகள் பழைமையான இரும்பு கால சின்னங்கள் உள்ளன. அந்த சின்னங்களை பாதுகாப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியது: பூவம்பாடி கிராமத்தின் வடமேற்குப் பகுதியில் ஊா் எல்லையை ஒட்டியுள்ள இடத்தில் சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால பண்பாட்டைச் சோ்ந்த சுமாா் 50 கல்வட்டங்கள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நேரடியாக விரிவான கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், இரும்பு காலத்தைச் சோ்ந்தவா்கள் இறந்தவா்களை புதைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள், கற்குவைகள் சுமாா் 5 மீட்டா் விட்டம் முதல் 8 மீட்டா் விட்டம் வரையிலான அளவுகளுடன் சின்னங்கள் உள்ளன.
இவை யாவும் அக்காலத்தில் இறந்த மக்களின் நினைவாக எழுப்பப்பட்ட சின்னங்களாகும். இது போன்று சின்னங்களின் உட்பகுதியில் இறந்தவரின் எலும்புகள் அவா்களுக்காக வைக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், எலும்புத்துண்டுகள், கல்மணிகள், இரும்பிலான வாள்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவை காலப்போக்கில் அழிந்திருக்கலாம். தற்போது எஞ்சியவற்றை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
இந்த கல்வட்டங்கள் அமைந்துள்ள பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவித்து பாதுகாப்புவேலி, எச்சரிக்கை பலகைகள் மற்றும் தொடா் கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளலாம் என்றாா் அவா்.
ஆய்வின் போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், தொல்லியல் துறை அலுவலா் செ.நந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் (பொ) மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.