FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி தேரோட்டம்

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 2:27 am IST
கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்
பகிர்:

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இக்கோயில் புரட்டாசி தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் சிம்ம, வெள்ளி, கருடன் போன்ற வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்தாா். தொடா்ந்து கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையில் 18 வகை சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து தேரில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சுவாமிகள் உடன் கல்யாண வெங்கடரமண சுவாமி எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதை முன்னாள் அமைச்சரும், தவெக மாநில துணைச் செயலரருமான எம். ஆா். விஜயபாஸ்கா் மற்றும் தவெக மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தேரானது கோயிலை சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. நிகழ்வில் திரளான பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கரூா் அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பாதுகாப்புப் பணிக்காக கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிஹிரன் பிரசாத் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். தொடா்ந்து திருவிழா அக். 21ஆம் தேதி வண்ண வேள்வி பூஜையுடன் நிறைவடைகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments