FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2.35 கோடி நிதி

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.35 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.35 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.35 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், பரப்பு அதிகரித்தலில் மா அடர் நடவு, வீரிய காய்கறி சாகுபடி, நறுமணப் பயிர்கள் சாகுபடிக்கு 520 ஹெக்டேருக்கும், பாதுகாக்கப்பட்ட சாகுபடியில் பசுமைக்குடில் அமைக்க 5,000 ச.மீட்டர் நிழல் வலைக் குடில் அமைக்க மற்றும் நிலப்போர்வை அமைத்து தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள 100 ஹெக்டேருக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

மேலும், தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீக்கள் மற்றும் தேனீ வளர்ப்பு பெட்டிகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.

குறைந்த செலவில் 25 மெட்ரிக் டன் வெங்காயம் சேமிக்க தேவைப்படும் மேற்கூரை அமைப்புக்கு இலக்கீடு பெறப்பட்டு, 50% மானியமாக ஓர் அமைப்புக்கு ரூ. 87,500 மானியம் வழங்கப்பட உள்ளது. இயந்திரமாக்குதல் இனத்தின் கீழ், மினி டிராக்டர் 25% மானியத்துடன் 4 பேருக்கும், பவர் டில்லர் 18 பேருக்கு 40% மானியத்திலும் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளது.

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திராவை 94430 01793 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

தொடர்ந்து, ஆலத்தூர் வட்டாரம் தொண்டப்பாடி கிராம விவசாயி ஜெயசூர்யாவுக்கு ரூ. 1.62 லட்சம் மதிப்பிலான பவர் டில்லரும், பால்வளத் துறை மூலம் திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பால் உற்பத்தியாளர்கள் நலநதி வழங்கும் திட்டத்தின் கீழ், விபத்தில் உயிரிழந்த பால் உற்பத்தியாளரின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான காசோலையும் ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 406 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் முருகேஸ்வரி, தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா, பால்வளத் துறை துணைப் பதிவாளர் டி. பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments