நலநிதி பெற திருத்தியமைக்கப்பட்ட திட்டம்:பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற அழைப்பு
பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி பெறும் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழை
பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி பெறும் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பால்வளத் துறை மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கென பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திருத்தியமைக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களில் நாள்தோறும் பால் ஊற்றி வரும் தொகையில் மாதம் ரூ. 1 பிடித்தம் செய்து வந்தால் இடர்பாடு காலங்களில் இழப்பீட்டு நிதியுதவி வழங்கப்படும். அதன்படி, விபத்து காரணமாக கண்கள், கைகள், கால்கள் என குணப்படுத்த இயலாத இழப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ, பால் ஊற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இழப்பீட்டு நிதியுதவியாக ரூ. 1.75 லட்சமும், விபத்து காரணமாக ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு ஏற்பட்டால், ரூ. 75 ஆயிரம் இழப்பீட்டு நிதியுதவியாக வழங்கப்படும்.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ உறுப்பினரின் 21 வயதுக்குள்பட்ட 2 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், 21 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு திருமண நிதியுதவியாக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும். பெண் குழந்தையின் வயது 18-க்கு கீழ் இருந்தால், 21 வயது நிரம்பும் வரை திருமண உதவித்தொகை வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 9.35 லட்சம் மதிப்பிலான இழப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 179 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 16,000 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், விவரங்களுக்கு 99622 49175 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.