FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் செப்.1 -இல் ஐபிபி வங்கிக் கிளைகள் திறப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சல்துறை சார்பில் 5 இடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கிளைகள் வருகிற 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சல்துறை சார்பில் 5 இடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கிளைகள் வருகிற சனிக்கிழமை (செப். 1) திறக்கப்படுவதாக திருவரங்க கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மைக்கேல்ராஜ் தெரிவித்தார். 
பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் மத்திய அரசின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: 
அஞ்சல்துறை மூலம் போஸ்ட் பேமெண்ட் வங்கி தொடங்கப்படுகிறது. இந்தியாவில் முதல்கட்டமாக 650 கிளைகளும், 3,250 அஞ்சலகத்துடன் இணைந்த கிளைகள் திறக்கப்பட உள்ளது. திருவரங்க கோட்டத்துக்குள்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், மதனகோபாலபுரம், வாலிகண்டபுரம், ரஞ்சன்குடி, தேவையூர் ஆகிய 5 இடங்களில் கிளை திறக்கப்படுகிறது. இந்த கிளைகள் அந்தந்த பகுதியில் உள்ள அஞ்சல் நிலைய வளாகத்தில் செயல்படும். மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை (செப்.1) கிளை திறக்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பாரமரிக்கத் தேவையில்லை. 
கணக்கு தொடங்க ஆதார் எண், பேன் நம்பர், செல்போன் எண் மட்டும் போதுமானது. 
இருப்புத் தொகைக்கேற்ப தினசரி வட்டி 4 சதவீதம் கணக்கிடப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். கணக்கு வைத்திருப்போர் எந்தவொரு அஞ்சலகத்திலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
மொபைல் வங்கி ஆப், மிஸ்டு கால் பேங்கிங், எஸ்எம்எஸ் பேங்கிங், ஐவிஆர் பேங்கிங், கீ.ஆர்.கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவமசாக வழங்கப்படும. நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் ஆகிய வசதிகள் மூலம் பணம் செலுத்தலாம்.
அதேபோல, மின் கட்டணம், போன் பில், இன்சூரன்ஸ், கடன் தொகை ஆகியவற்றை இருக்கும் இடத்திலிருந்தே செலுத்த முடியும். மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியங்கள், முதியோர் ஓய்வூதியம், எரிவாயு மானியம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் நேரடியாக பெறலாம். அஞ்சல் துறையின் அனைத்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு தங்களுடைய வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். 
மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் மைக்கேல்ராஜ். 
கூட்டத்தில் தலைமை அஞ்சல் நிலைய அலுவலர் ராஜூ, வங்கி மேலாளர்கள் ஆனந்த், நிவேதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments