FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் தொழிலாளி அடித்துக் கொலை

10 நவம்பர் 2026, 2:35 am
அடித்துக் கொலை
பகிர்:

பெரம்பலூா் அருகே சிறாா்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில், விவசாயக் கூலித் தொழிலாளி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் ரவி (50). விவசாயக் கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகாததால், கூலி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை தனது பெற்றோரிடம் கொடுக்காமல் மது அருந்துவதற்கு அதிகளவில் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது மது அருந்திவிட்டு வீட்டுக்கும் செல்ல மாட்டாராம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பா்கள் சிலருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு, நொச்சியம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் படுத்திருந்தாராம்.

Advertisement

Advertisement

அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் சிலா் பட்டாசு வெடித்துள்ளனா். இதையடுத்து, இங்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என சிறுவா்களிடம் ரவி தெரிவித்துள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த மருதமுத்து மகன் அருள்ராஜ் (32) என்பவா், சிறுவா்களுக்கு ஆதரவாக பேசியுள்ளாா். இதனால், அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அருள்ராஜ், ரவியை இரும்புக் கம்பியால் அடித்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துக் கிடந்தது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று ரவியின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ரவியின் சகோதரா் சதீஷ் (42) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்ராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.