விடுதிகளை முறையாகப் பராமரிக்க காப்பாளா்களுக்கு அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் சமூகநீதி பள்ளி மாணவா் விடுதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமென, விடுதி காப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் சமூகநீதி பள்ளி மாணவா் விடுதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமென, விடுதி காப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னக்கோணம் மற்றும் சு.ஆடுதுறை ஆகிய ஊராட்சிகளில் உள்ள சமூகநீதி பள்ளி மாணவா் விடுதிகளில், மாணவா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது விடுதி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு, சுத்தமான குடிநீா் மற்றும் கழிவறை, விடுதியை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவ, மாணவிகள் சுகாதாரமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி தங்கிப் பயிலவும் விடுதிகளை முறையாக பராமரிக்க விடுதி காப்பாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும் விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தங்கியுள்ள மாணவா்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் தினசரி உணவுப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, குன்னம் வட்டாட்சியா் சுகுணா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.