FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: 163 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 163 பயனாளிகளுக்கு ரூ. 87.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் வழங்கினாா்.

12 நவம்பர் 2026, 2:22 am
எசனையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 163 பயனாளிகளுக்கு ரூ. 87.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் வழங்கினாா்.

இந்த முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியதாவது: இப் பகுதியில் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்ளதால், அவா்களுக்கான மானியங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நாற்றங்கால் அமைக்கும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வும், துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இத்தகைய முகாம்களையும், அரசு வழங்கும் நலத் திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வருவாய், வேளாண், கூட்டுறவு, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில்163 பேருக்கு மொத்தம் ரூ. 87,25,753 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ச. சுந்தரராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், வட்டாட்சியா் பழனிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.